google-site-verification: googlee9cb2a81adc6f062.html சிந்தனைவாதி : போக்குவரத்து மசோதா திருத்தம் மோ(ச)டி அரசியல்

Tuesday, August 30, 2016

போக்குவரத்து மசோதா திருத்தம் மோ(ச)டி அரசியல்


அக்டோபர் 2 வேலை நிறுத்தம் நமக்கானதா??
என்பதற்கான பதில் ????

போக்குவரத்து மசோதா திருத்தம் செய்யப்படாமல் ஒரு வேலை நிறைவேற்றப்படால்......

1. தலை கவசம் அணியாமல் விபத்துகள் ஏற்பட்டால் விபத்து இழப்பீடு கிடைக்காமல் போகலாம்.

2. தலைக்கவசம் என்னுடைய நிறுவனத்தில் மட்டுமே வாங்க வேண்டும், விலை ரூபாய்.5000 என்று கூறலாம்.

3.RTO அலுவலகம் இல்லாமல் போட்டியிட்டு தனியார்மயமாக்கல் ஆனால் பணம் படைத்த நிறுவனத்திடம் ரூபாய் 10000 கொடுத்து இருசக்கர வாகனத்திற்க்கான ஓட்டுனர் உரிமம் பெற வாய்ப்புகள் உள்ளன .

4.தவறுதலாக ஏற்படும் வாகன  விபத்துகளில் உயிர் இழப்பிற்கு வாகனத்தை ஓட்டியவருக்கும் , வாகன உரிமையாளருக்கும் 3 முதல். 5  வரை சிறைதண்டனை வழங்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

5.நாம் புதிதாக வாங்கிய வாகனத்தின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் அதே நிறுவனத்திடமே செல்லவேண்டும் , ஒருவேளை ரூபாய் 100000 செலவாகும் என்றால் கொடுத்து தான் ஆக வேண்டும் , இல்லை என்றால் வாகனத்தை வீட்டிலேயே வைக்கும் நிலை வரலாம் .

இவைகள் அனைத்திலும்  எந்த ஒரு சாதாரண நபரும் பாதிக்கப்படலாம்.

நல்லது நாட்டிற்கு என்று கருதிவிடவும் முடியாது, எனெனில் இந்த அனைத்து சட்டங்களும் வருவாயாக பெரும் பண முதலாளிகளிடமே சென்றடையும்

எப்படி???

1. விபத்து இழப்பீடு வழங்கும் நிறுவனம். அனைத்தும் பெரு முதலாளிகளுடையது ஆகலாம் , அப்படி ஆகும் பட்சத்தில் எந்த ஒரு இழப்பீடு  வழங்காமல் ஏதே சட்டக் காரணங்களை காட்டி இழப்பீடு தடுக்கப்படலாம் .லாபம் அந்த நிறுவனத்திற்க்கு மட்டுமே......

2.வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்கள் தனியார் ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் அதிகாரம் அரசால் பெறப்படுமேயானால் ,அந்த நிறுவனத்தின் பொருட்களை மட்டுமே வாங்க முடியும் அதுவும் அவர்கள் நிர்ணயித்த விலையில் ...
விளைவு அதை சாந்த மற்ற தொழில்களும் அழியும் .
தொழில் இல்லன்னா தொழிலாளர்கள் இல்லை..

நாட்டில் லட்சணம் :- 
     மோடி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம் மீட்கப்படும் , அனைத்து மக்கள் நலத்திட்டத்திற்க்கு பயன்படுத்தப்படும் என்றார்கள் செய்தார்களா ???
      தனிமனிதனுக்கு லட்சம் கோடிக்கு மேல் கடன் கொடுத்து நாட்டில் நிதிஇழப்பு ஏற்படுத்தியுள்ளனர் 

     லட்சம் கோடி கடன் வாங்கிய நிறுவனங்கள் தான் நாட்டையும் அரசையும் ஆட்டி வைக்கின்றன 

  இந்த லெச்சனத்துல ஆரசு நல்லது செய்யும் என்று நம்புவது முட்டாள் தனம்...

   நாட்டிற்க்கு நல்லது செய்ய துப்பு இல்லைன்னாலும் பரவாயில்லை, துணிந்து நல்லது செய்ய முற்படும் மனிதர்களை ஏமாத்துக்காரன் என்று தீர்பிடாதீர்கள்.......

 நன்றி.....Xavier fb 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

0 comments :

Post a Comment

UA-32876358-1