google-site-verification: googlee9cb2a81adc6f062.html சிந்தனைவாதி : மனைவிக்கு ஓர் காதல் கடிதம்‬

Saturday, February 13, 2016

மனைவிக்கு ஓர் காதல் கடிதம்‬


உன்னைக் காதலிக்க ஆரம்பித்த பின்பு வரும் முதல் காதலர் தினம்.. அந்த பிங்க் கலர் காட்டன் சேலை ரொம்ப அழகா இருக்கு எனக்கு அது பிடிச்சிருக்குன்னு கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரி காம்ப்ளக்சில் இருக்கும் கடையை கடக்கும் போதெல்லாம் சொல்லுவாய்.. அதன் விலை 125 ரூபாய்.. அடேயப்பா.!!!!!

அப்போது என் மாதச்சம்பளம் 350 ரூபாய்.. யானைக்கு அரை பாக்கெட் சோளப்பொரி வாங்கும் காசு.. உனக்கு அதை பிப்ரவரி 14 தேதிக்கு பரிசளிக்க டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே அப்போது நான் பார்த்த என் ரெப்ரசெண்டிவ் வேலையில் சில காலை உணவுகள் துறந்து..

பஸ்சில் போகாது நடந்து மிச்சம் பிடித்த காசுகள்... வைராக்கியமாக தவிர்த்த சிகரெட்டுகள்.. கடினமாக பார்த்த வேலையில் உழைத்து கிடைத்த இன்சென்டிவ்.. ஒரு வழியாக பிப்ரவரி 10 ஆம் தேதி 150 ரூபாய் சேர்ந்து விட 125 ரூபாய் புடவையை அன்று கடைக்காரர் 110 ரூபாய்க்கு தந்துவிட கிப்ட் பேப்பருக்கு 5 ரூபாய் செலவழித்து பேக் செய்து..

மீதி 35 ரூபாயில் அமெரிக்கன் கல்லூரி எதிரில் உள்ள அலங்கார் ஸ்வீட்சில் ஸ்வீட் காரம் காபியுடன் மெல்ல அந்த கிப்டை உனக்கு தர விழிகளில் வெளிச்சம் விரிய அதை பிரித்து அது உனக்கு பிடித்த சேலை என்றதும் கண்களில் வாட்டர் கோட்டிங்கோடு ஒரு பார்வை பார்த்து சிரித்தாயே.. நினைவிருக்கிறதா..!

நமக்கு திருமணமான பின்பு பல விலையுயர்ந்த பரிசுகள் உனக்கு கொடுத்து இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன் நான் உனக்குத் தந்த முதல் காதல் பரிசு இன்று வரை மறக்க இயலாது.. என் கண்மணியே.. ஐ லவ் யூ.. பானு டியர்.. ஹேப்பி வேலன்டைன் டே...!

நன்றி-வெங்கடேஷ் ஆறுமுகம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

0 comments :

Post a Comment

UA-32876358-1